Saturday, January 22, 2011

திருவேரகம் [ஏரகரம்], கும்பகோணம் -ஸ்தல வரலாறு

உலகில் உள்ள தொன்மையான முருகன் ஸ்தலங்களில் இதுவும் ஒன்று . இக்கோவில் சுவாமிமலை தோன்றுவதற்கு முன்பே தோன்றபட்டதாக புராண செய்திகள் குறிப்பிடுகின்றன .இக்கோவிலில் தான் சிவ பெருமானுக்கு மந்த்ரோபதேசம்  நடந்ததாக சான்றுகள் உள்ளன .பல சிவ தொண்டு ஆற்றிய நக்கீரர்  மற்றும் அருணகிரி நாதாரால் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்றது.


சான்று- சிவனுக்கு மத்ரோபதேசம் செய்யும் பொழுது அகஸ்தியரும்  இருந்தார் .அப்பொழுது  அகஸ்தியர் ,முருகனிடம் " உன் தந்தைக்கு என்ன உரைத்தாயோ அதை என்னிடமும்  உபதேசிக்க வேண்டும் " என்று கூறினார் . இதற்கு சான்றாக  இக்கோவிலில் முருகனுக்கு அருகாமையில்  அகஸ்தியர் அருள் பாலிக்கின்றார் .இதை இன்றளவும் காண முடிகிறது .மேலும் இக்கூற்றுக்கு சான்றாக கந்த புராண  பாடல் பறைசாற்றுகின்றது .
                               மற்றொரு சிறப்பாக இக்கோவில் தான் சிவனை முருகப்பெருமான் பூஜை செய்து அம்பிகையிடம் பாசுபத அஸ்தரம்  வாங்கிய புண்ணிய திருத்தலமாக விளங்குகின்றது 
 அக்காரணத்தினால்  இங்கு சிவனுக்கு ஸ்கந்த நாதசுவாமி என்று பெயர் .
                      இத்திரு கோவிலில் புண்ணிய தீர்த்தமாக சரவணா பொய்கை விளங்குகின்றது . முன்னொரு காலத்தில், ஏழு பிரகாரங்களுடன்  விளங்க பெற்று கால போக்கில் அது சிதைவுற்று இன்று ஒரு பிரகாரத்துடன் திகழ்கிறது.




வழி: இத்திருக்கோவில் கும்பகோணம்-சுவாமிலை நெடுஞ்சாலையில் ஏரகரம் என்னும் ஊரில் அமைய பெற்றுள்ளது .




குறிப்பு:- சுவாமிமலை செல்லும் பக்கதர்கள் இத்திருகோவிலையும் வழிபட்டு செல்லுதல் சிறப்பு 

4 comments: