Wednesday, January 26, 2011

கந்த புராண பாடல் -திருவேரகம் .

                    நீரகத் தேதனை    நினையும் அன்பினோர்
                     பேரகத் தல மரும் பிறவி நித்திடும்
                      தாரக துருவமாம் தலைமை எய்திய
                      ஏரகத்து ஆறுமுகன் அடிகள் எற்றுவமே     

                                                     

 இப்பாடல் கந்த புராண பாடல் ,பல இணைய தளங்களில் திருஏரகம் எனும் சுவாமிமலை என்று குறிபிடுகிறார்கள் .ஆனால் இரண்டும் வெவ்வேறு தலங்கள்.
                                               அதே சமயம் ஒன்றோடு ஒன்று ஒற்றுமை உள்ளவை தான் .ஏனெனில் திருவேரகம் (ஏரகரம்)என்னும் தலம்  ,மந்திர உபதேசம் செய்த தலம் இங்கிருந்து மனிதர்கள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வது போல் சுவாமியும் சென்று இங்கு வந்து விட்டதாக வரலாறுகள் கூறுகின்றன .இப்பாடலில் தாரஅகத்து உருவம் என சொன்னது முருகனை தான் ,அப்படி தாரக மந்திரத்தை உரைத்த ஏரகத்து முருகன் அடிகள் பணிவோம் என்று கூறுகிறது எனவே இது ஒரு சான்று .எனவே ஸ்வாமிமலையும் இதுவும் வெவ்வேறு ஆனால் ஒற்றுமை உள்ளவை .
                                                   எனவே பக்தர்கள்  இந்த கோவிலை தரிசித்து விட்டு சுவாமிமலை சென்று சுவாமி நாத சுவாமியை வழி பட்டால் பூரண பலன் கிட்டும் எனபது உண்மை ......

No comments:

Post a Comment