Wednesday, January 26, 2011

ஆதி சுவாமிநாத சுவாமியின் தோற்றம்

www.vedas.com/eraharam/home.htmவணக்கம்
                         தாரக மந்திரத்தை உரைத்த ஞான மூர்த்தியாம் ஆதி சுவாமிநாத சுவாமி தோற்றமானது மிக அழகுற அமையப்பெற்றுள்ளது .
       அபயம் அளித்தவாறு வலது கரம்
       இடுப்பில் கை வைத்தவாறு இடது கரம்
      ஒரு கையில் பாசுபதஸ்த்ரம்
      ஒரு கையில் வஜ்ராயுதமும்
                                             ஏந்தி அருள் பாலிக்கிறார் .

                      சுவாமி மலை யில் உள்ள சுவாமி நாதருக்கும் இந்த ஏரகத்து சுவாமிநாத சுவாமிக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உள்ளன
சுவாமிமலை:
          அவருக்கு மொட்டை தலை
           அவருக்கு இரண்டு கரங்கள்
           அங்கு அகஸ்தியர் சிலை இல்லை .
           இயற்கையாக ஏற்படுத்திய மலை .
ஏரகரம் :
          இவருக்கு இங்கு வைர முடி சேவை  அதாவது முடியிலேயே   தங்கம் வைரம் போன்ற நகைகளை வைத்து அலங்காரம் செய்து கொள்வது .இதற்கு ஒரு உதாரணம் ராஜராஜ சோழன் புகைபடத்தில் நாம் அவன் முடியிலே அலங்காரம் செய்திருப்பதை காணலாம் .அது போன்று தான் இங்கும் .
                                                     இங்கு அகஸ்திய முனிவர்  முருகன் சன்னதியிலேயே அருள் பாலிக்கிறார் .சுவாமிமலையில் அகஸ்தியர் சுதை வடிவில் தந்தைக்கு உபதேசம் செய்யும் காட்சியில் இருப்பார்.ஆனால் இங்கு உண்மையிலேயே சந்நிதியில் இருக்கிறார் .
                                சிவனுக்கு உபதேசம் செய்த உடனே அகஸ்திய முனிவரும் உபதேசம் பெற்று கொள்கிறார் முருகனிடமிருந்து ,எனவே இங்கு தான் உபதேசம் நடந்துருக்கிறது எனவே வைத்துக்கொள்ளலாம் .
  இரண்டாவதாக அனைத்து அறுபடை வீடுகளிலும் சரவண பொய்கை எனும் தீர்த்தம் இருக்கும் திருபரம்குன்றதிலும் ,பழனியிலும் ,திருத்தணியிலும் இருபது போல் இங்கும் சரவண பொய்கை திருக்குளம் உள்ளது .
      இது ஒரு சான்று ...
                                                    எனவே பக்தர்கள் சுவாமிமலை செல்லும் போது எரகரத்தையும் தரிசித்து செல்ல வேண்டும் என்று ஆசை படுகிறோம் .

                                               இப்படிக்கு
                              திருவேரகத்து  இறைவன் அடிமைகள் ..........
       

4 comments:

  1. http://www.vedas.com/eraharam/History.htm
    pls check out the below link...
    the another proof for the eraharam temple....

    ReplyDelete
  2. can you tell us the exact location/address to reach this temple?

    ReplyDelete
    Replies
    1. கும்பகோணம் மேலக்காவிரி பாலம் இறங்கி இடதுபுறம் சுவாமிமலை செல்லும் வழியில் மூப்பக்கோயில் எனும் இடத்தில் வலது புறம் திரும்பும் முனையிலேயே ஸ்ரீ கந்தநாத சுவாமி திருக்கோயில் செல்லும் வழி என்று பெயர்ப்பலகை காணலாம் அங்கிருந்து நேர் 3 கி.மீ தொலைவில் எங்கும் திரும்பவேண்டாம்..ஆலயத்தை அடையலாம்

      Delete
  3. Thanks Sri.V.Karthikeyan sir,it is just 5 k.m.s from Kumbakonam.On Swamimalai route after crossing Melacauvery u have to turn right that is north direction,

    ReplyDelete